உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளிக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் மாற்றி அமைப்பு

பள்ளிக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் மாற்றி அமைப்பு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவாயிலில், மாணவர்களுக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவாயில் பகுதியில், மின் கம்பம் நடப்பட்டு இருந்தது. இந்த கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயமும், மாணவர்களுக்கு இடையூறாகவும் இருந்ததால், இது குறித்து பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டனிடம் பள்ளி நிர்வாகம் சார்பில், மாற்றி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில் பள்ளிக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தை மாற்றி அமைத்தும், பள்ளி நுழைவாயிலில் மின் கம்பிகளை உரசி கொண்டிருந்த மரத்தை கவாத்து செய்தும் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்ததற்காக, பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டனுக்கு, தலைமையாசிரியர் சாகுல் அமீது நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை