உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வாங்கல் வந்து சேர்ந்தது

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வாங்கல் வந்து சேர்ந்தது

கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று கரூர் அருகே வாங்கலை அடைந்தது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பணிக்காக நேற்று முன்தினம், காவிரியாற்றில் தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு, 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களாக குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்று முன்தினம் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டம் வாங்கல் காவிரியாற்று பகுதிக்கு நேற்று காலை வந்து சேர்ந்தது. இதையடுத்து, கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு இன்று முதல் தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை