உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் தாலுகா அலுவலகத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி

கரூர் தாலுகா அலுவலகத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி

கரூர் :கரூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று மூன்றாவது நாளாக ஜமாபந்தி நடந்தது. கரூர் மாவட்டத்தில் புகழூர், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் ஆகிய, ஏழு தாலுக்காவை சேர்ந்த, வருவாய் கிராமங்களுக்கு, நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த, 22ல் தொடங் கியது. நேற்று மூன்றாவது நாளாக, கரூர் தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையாளர் கருணாகரன் தலைமையில், ஜமாபந்தி நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். கரூர் தாசில்தார் குமரேசன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.* குளித்தலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு, சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். விழாவில், மனுக்கள் கொடுத்த பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.* கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம் தெற்கு, வடக்கு, பிள்ளபாளையம் பகுதி மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. குறிப்பாக, மகாதானபுரம் தெற்கு பகுதி பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த, மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இணையவழி பட்டா மாறுதல் செய்ய கோரி, 50க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர்.கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகரன், தேர்தல் பிரிவு தாசில்தார் வித்தியாவதி, தனி தாசில்தார் ஈஸ்வரன், தலைமையிடத்து துணை தாசில்தார் தீபதிலகை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை