பசுபதீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு திருக்கல்யாண உற்சவ கோலாகலம்
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சூர-சம்ஹார விழா கடந்த, 2ல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும் காப்பு கட்டுதல், உட்பிரகார புறப்பாடு, லட்ச்சார்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 7 ல் ஆறுமுக பெருமான் கந்த சஷ்டி மகா அபி ேஷகம், மாலை, 4:30 மணிக்கு சக்திவேல் வழங்குதல் மற்றும் கோவில் வளாகத்தில் நான்கு மாடவீதிகளிலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை, 10:30 முதல், 11:30 மணி வரை முருகன், வள்ளி தெய்வானை உடனான திருக்கல்யாண உற்சவமும், மாலையில், உற்சவர் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலிலும், சஷ்டி விழாவையொட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்-தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.* கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார-மாக சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் நடந்தது. நேற்று கடைசி நாளாக முருகனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளி-காப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.