சேங்கல் மலை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
கரூர்: கரூர் அருகே, சேங்கல் மலையில், புரட்டாசி திருவிழா, கொடி-யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. சனிக்கிழமை தோறும் கோவிலில், சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 11:30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராள-மான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மஹா தீபா-ராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.