மேலும் செய்திகள்
திருக்குறள் திட்ட சிறப்பு பயிலரங்கம்
16-Feb-2026
கரூர்:கரூர் மாவட்ட, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் திட்ட நிறைவு விழா மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் நடந்தது.அதில், 1,330 திருக்குறள்களை ஓப்புவித்து அரசு விருது மற்றும் பண முடிப்பு பெற மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பிறகு, மாணவியர் தர்ஷினி, சுபஸ்ரீ, மாணவர் கிருத்திக் ஆகியோருக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்-டது.விழாவில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனி-யப்பன், தலைமையாசிரியை சித்ரா, திருக்குறள் திருப்பணிகள் பயிற்சியாளர்கள் சாருமதி, விஜயலட்சுமி, தொழில்அதிபர் தங்க-ராசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.
16-Feb-2026