உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

குளித்தலை,குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக திகழ்கிறது. சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த, 1ம் தேதி முதல் வரும், 14 வரை நடைபெற உள்ளது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், வீரப்பூர் ஜமீன்தார், தோகைமலை தமிழ் சங்க நிறுவன தலைவர் காந்திராஜன், கோவில் செயல் அலுவலர் தங்கராஜ், தாசில்தார் இந்துமதி மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், கரூர், அரியலுார், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மலையை சுற்றி மூன்றரை கி.மீ., திருத்தேர், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருத்தேர் நிலையில் நிறுத்தம் செய்யப்படுகிறது. 12ம் நாள் நிகழ்ச்சியான திங்கள்கிழமை தெப்பக்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13ம் தேதி இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. 14ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை