மேலும் செய்திகள்
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்
24-Sep-2025
குளித்தலை: தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.குளித்தலை அடுத்த கம்மநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 38, விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த, 2021ல், கருப்பத்துாரை சேர்ந்த கோபால் கொலை வழக்கில், இரண்டு ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு, ஜாமினில் வெளிவந்து, ஒவ்-வொரு மாதம், 1ம் தேதி குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண்-1ல், கையெழுத்திட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த, 6ம் தேதி இரவு 7:00 மணியளவில் மகா-தானபுரம் பேக்கரி அருகே டீ குடிப்பதற்காக சுரேஷ், அவரது மகன் விஷ்ணு, நண்பர் பிரசன்னா ஆகியோருடன் சென்றார். அப்-போது, அங்கு நின்று கொண்டிருந்த கருப்பத்துாரை சேர்ந்த நந்த-குமார், 25, உதயகுமார், 21, மாணிக்கவாசகம், 27, சகரன், சபரி ஆகிய ஐந்து பேர் சேர்ந்து, 2021ம் ஆண்டு இதே நாளில் எங்க அண்ணன் கோபாலை கொலை செய்தீர்கள்; உன்னை கொலை செய்வதற்காக நிற்கிறோம் என தகாத வார்த்தையால் பேசினர்.பின், திடீரென மறைத்து வைத்திருந்த பட்டா கத்தி, வீச்சு அரி-வாளை எடுத்து சுரேஷை வெட்ட ஓடி வந்தனர். அதற்குள் சுரேஷ் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பினர். உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என கூறி விட்டு, ஐந்து பேரும் அங்-கிருந்து சென்றனர்.இது குறித்து சுரேஷ் அளித்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமார், உதயகுமார், மாணிக்கவாசகம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தலைம-றைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
24-Sep-2025