உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த மூவர் கைது

கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த மூவர் கைது

கரூர்: கரூர் அருகே, போதை மாத்திரை மற்றும் ஊசிகளை வைத்திருந்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மண்மங்கலம் தனியார் பள்ளி அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 10 போதை மாத்திரைகள், 12 ஊசிகளை வைத்திருந்ததாக, கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த தனுஷ், 21; பிரிடுகெவல், 22, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை, வாங்கல் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை