உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயிக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு

விவசாயிக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, 65; விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, விவசாய தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அதே ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாரத், 42; அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் உறவினர் சின்னப்பொண்ணு ஆகியோர் டிராக்டர் மூலம் உழவு ஓட்டிக்கொண்டிருந்தனர். அப்போது ரங்கசாமி, 'ஏன் என் நிலத்தில் டிராக்டர் ஓட்டுகிறாய்' எனக்கேட்டதற்கு, மூவரும் தகாத வார்த்தையில் பேசி, கம்புகளால் தாக்கி, டிராக்டர் ஏற்றி கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரங்கசாமி, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து புகார்படி, பாலவிடுதி போலீசார், பாரத், மகாலட்சுமி, சின்னப்பொண்ணு ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !