உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரும் 30 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு ஆரம்பம்

வரும் 30 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு ஆரம்பம்

கரூர், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு கரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் வெண்ணைமலையில் உள்ள, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. தற்போது, தமிழ்நாடுஅரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு நடக்க உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30 முதல் நடத்தப்படவுள்ளது.பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, வாராந்திர தேர்வு, மாதிரி தேர்வு, இணையதளம், கணிணி வசதியுடன் கூடிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது 04324-223555 என்ற தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி