உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாளை ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம்

நாளை ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம்

கரூர்:பண்டுதகாரன் புதுார் கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்த, கட்டண பயிற்சி முகாம் நாளை (24ல்) நடக்கிறது.இதுகுறித்து, ஆராய்ச்சி மைய தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரூர் பண்டுதகாரன்புதுார், கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை காலை, 10:30 மணிக்கு ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. அதில், காடை வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், காடையினங்கள், கொட்டகை அமைத்தல், காடைகளுக்கான தீவனம் தயாரித்தல், காடைகளை தாக்கும் நோய் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலை கழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். மேலும், படத்துடன் செயல்முறை விளக்கம் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணம், 590 ரூபாய். மதிய உணவு, கையேடு, பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.முகாமில் விவசாயி கள், இளைஞர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி