மேலும் செய்திகள்
ஜூலை 9ல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த ஆலோசனை
29-Jun-2025
கரூர், கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தொ.மு.ச., தலைவர் அண்ணா வேலு தலைமையில், தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.அதில் ஜூலை, 9ல் நடக்கவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தை விளக்கி வரும், 4 ல் டி.என்.பி.எல்., ஆலை முன்பும், 5 ல் கரூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பும், அன்று மாலை கரூர் மின் வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும், பிரசார கூட்டங்களை நடத்துவது, வரும், 9ல் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆர்ப்பாட்டம், மறியல் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் அப்பாசாமி, பழனிசாமி, ஜீவானந்தம், வடிவேல், சுடர்வளவன், ராஜசேகர் உள்பட, பலர் பங்கேற்றனர்.
29-Jun-2025