மேலும் செய்திகள்
வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்
17-Jul-2025
மாணவர் சேர்க்கை ஐ.டி.ஐ.,யில் கலந்தாய்வு
09-Jul-2025
கரூர், கரூர் அருகே, பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை, (7ல்) கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.இதுகுறித்து, பயிற்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:கால்நடை வளர்ப்பில், தீவன பயிர்களின் மேலா ண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், நாளை ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது. அதில், தீவன பயிர்கள் குறித்தும், கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறித்தும், பல்வேறு தலைப்புகளில், பல்கலைகழக பேராசிரியர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.பயிற்சி முகாமில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு, தீவன பயிர்கள் தொடர்பாக, சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 04324-294335, 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நாளை காலை, 10:30 மணிக்கு பயிற்சி மைய வளாகத்துக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
17-Jul-2025
09-Jul-2025