உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

கிருஷ்ணராயபுரம், வயலுார் பகுதியில் மரக்கன்றுகளுக்கான பராமரிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சாலையோரம் பகுதிகளில் பஞ்சாயத்து சார்பில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. வேம்பு, ஈட்டி, புங்கன் மற்றும் இதர மரக்கன்றுகள் வயலுார் மழை நீர் சேமிப்பு குளம் சாலை, நடுப்பட்டி சாலை ஆகிய சாலையோரம் இடங்களில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு நடப்பட்டது. தற்போது மழை காலம் என்பதால், மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. இதை சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்தது. பின்னர் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி