உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, குச்சிப்பட்டி, கோவக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளத்தின் கரைகளில், டவுன் பஞ்சாயத்து சார்பில் புதிய மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. வேம்பு, புளியன், புங்கை, ஈட்டி உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை பஞ்சாயத்து பணியாளர்கள் கொண்டு நடப்பட்டது. பின்னர் மரக்கன்றுகளுக்கு தடுப்பு வேலி அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டது.இப்பணிகளை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன் பார்வையிட்டார். இந்த பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை