உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  பெண்ணிடம் சீண்டல் த.வெ.க., நிர்வாகிக்கு தர்ம அடி

 பெண்ணிடம் சீண்டல் த.வெ.க., நிர்வாகிக்கு தர்ம அடி

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரை சேர்ந்தவர், 25 வயது பெண்; திருமணமாகிவிட்டது. இவர், மெடிக்கலில் பணிபுரிகிறார். நேற்று இரவு, 7:00 மணிக்கு பணி முடிந்து, டூ - வீலரில், தோழியுடன் சென்றபோது, கிழக்கு ஒன்றிய, த.வெ.க., செயலர் ரமேஷ், பைக்கில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி, பெண்கள் இருவரும் விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், ரமேஷுக்கு தர்ம அடி கொடுத்தனர். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை