உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு காப்பு

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு காப்பு

கரூர்: கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், பசுபதிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், 19, என்பவரை, மதுவி-லக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 95 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.* தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி, நேற்று முன்தினம், சத்திய மூர்த்தி நகர், மூன்றாவது கிராஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த சீரங்கன், 68, என்-பவரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை