உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி கற்கள் கொண்டுசென்ற இருவர் அதிரடி கைது

அனுமதியின்றி கற்கள் கொண்டுசென்ற இருவர் அதிரடி கைது

கரூர்:தென்னிலை அருகே அனுமதி இல்லாமல், டாரஸ் லாரியில் கற்கள் கொண்டு சென்ற, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட புவியியல் சுரங்க துறை துணை அலுவலர் சங்கர், 41, தென்னிலை அருகே, அத்திப்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு டாரஸ் லாரிகளில் கற்கள் கொண்டு சென்றதாக டிரைவர்கள் சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்த முருகேசன், 52; பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 34; ஆகிய இரண்டு பேர் மீது, துணை அலுவலர் சங்கர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, இரண்டு பேரையும் தென்னிலை போலீசார் கைது செய்தனர். இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி