உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / யூனியன் கமிஷனர் சஸ்பெண்ட்; கரூர் கலெக்டர் உத்தரவு

யூனியன் கமிஷனர் சஸ்பெண்ட்; கரூர் கலெக்டர் உத்தரவு

குளித்தலை: குளித்தலை யூனியன் கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.குளித்தலை யூனியன் அலுவலகத்தில் கமிஷனராக ராஜேந்திரன் பணியில் இருந்து வந்தார். கடந்த 19ல், யூனியன் குழுவின் சாதா-ரண கூட்டம் நடைபெறுவதாக, குழு தலைவர் விஜய விநாயகம் அறிவித்திருந்தார்.அதன்படி கூட்டத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் வந்தனர். அப்-போது, கூட்ட அறை பூட்டப்பட்டு, தீர்மான நோட்டுகள் யூனியன் கமிஷனர் ராஜேந்திரனிடம் உள்ளதாகவும், அவர் விடுப்பில் சென்றுவிட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, அலுவலக முன்வாயிலில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், யூனியன் ஏ.பி.டி.ஓ., விஜ-யகுமார், கூட்டம் அறை திறக்கப்பட்டுள்ளது; அங்கு கூட்டம் நடத்தலாம் என தெரிவித்தார்.யூனியன் குழு தலைவர் விஜய விநாயகம் மற்றும் துணைத் தலைவர், தி.மு.க., கவுன்சிலர்கள், யூனியன் கமிஷனர் ராஜேந்-திரன் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்து, குளித்தலை-மணப்-பாறை நெடுஞ்சாலையில் கோட்டமேடு நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த, 26ல், நமது நாளிதழில், யூனியன் அலுவலகத்தில் உள்ள ஆறு 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களில், ஐந்து சேதமடைந்-துள்ளதாக படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து யூனியன் அலுவலகத்திற்கு மெயில் வந்தது.அதில், அரசு உத்தரவுகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி, யூனியன் கமிஷனர் ராஜேந்திரனை தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதாக, கலெக்டர் தங்கவேலு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, உத்தரவை பெற்றுக்கொண்ட யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.இது குறித்து யூனியன் ஏ.பி.டி.ஓ., விஜயகுமார் கூறுகையில்,'' அரசு உத்தரவுகளை முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, யூனியன் கமிஷனர் ராஜேந்திரனை தற்காலிக பணி நீக்கம் செய்து, கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை