உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நா.த.க., ஆர்ப்பாட்டம்

நா.த.க., ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்ட, நாம் தமிழர் கட்சி சார்பில், மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் நன்மாறன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வக்ப் வாரிய திருத்த சட்டத்தை அமல்படுத்திய, மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்மகன் நாகராசு, மருத்துவ அணி நிர்வாகி கருப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை