மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை..
12-Nov-2024
கரூர்: கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் கணபதிபாளையம் வடக்கு, முத்தலாடம்பட்டி வரை செல்லும் சாலை வழியாக காந்திகிராமம், காமராஜ் நகர், அன்பு நகர், திரு-மலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்-றன. காலையும், மாலையும் ஏராளமான வாகனங்கள் சென்று வரு-கின்றன.தற்போது பெய்த மழையால், கணபதிபாளையம் சாலையின் மையத்தில் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எப்போது மழை பெய்தாலும் இந்த சாலையின் மையப்பகுதி குண்டும், குழியுமாக மாறிவிடும். பின், மாநகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிடுகின்றனர். பின், மழை பெய்தால் மீண்டும் சாலை சேதமடையும். இப்பகு-தியில் கணபதிபாளையம் வடக்கு முதல் காமராஜ் நகர் வரை, மீண்டும் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்' என்றனர்.
12-Nov-2024