மேலும் செய்திகள்
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா
09-May-2025
க.பரமத்தி:மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வடை மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி, செல்வகுமார் மண்டப சாலையை சேர்ந்தவர் ரமேஷ், 45; வடை மாஸ்டர். இவரது மனைவி அம்சா, 32; மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த தொழிலாளி சிவக்குமார், 35. க.பரமத்தியில் உள்ள கல் குவாரியில் வேலைக்கு வந்தபோது, அம்சாவுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் ஐந்து ஆண்டுகளாக தொடர்பில் இருந்தனர். ரமேஷ் பலமுறை எச்சரித்தும், இருவரும் கைவிடவில்லை.கரூரில் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு ரமேஷ் வீட்டுக்கு சென்ற போது, அம்சாவும், சிவக்குமாரும் வீட்டில் இருந்தனர்.அதிர்ச்சியடைந்த ரமேஷ், இரும்பு கம்பியால் தலையில் அடித்ததில், சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். க.பரமத்தி போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷை கைது செய்தனர்.
09-May-2025