உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்கால் துார் வார கோரிக்கை

வாய்க்கால் துார் வார கோரிக்கை

கரூர் : கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் இருந்து நெரூர் வரை கிராமங்களின் வழியாக பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இதன் வழியாக செல்லும் தண்ணீர், அவ்வப்போது பாசனத்துக்கும் பயன்பட்டு வந்தது. பல மாதங்களாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மிகவும் மோசமான நிலையில் உள்ளது.வாய்க்கால் செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே ஆக்ரமிப்புகளும் உள்ளன. இந்த வாய்க்காலை துவங்கும் பகுதியில் இருந்து முடிவடையும் பகுதி வரை சீரமைத்து, திரும்பவும் மழை நீர் மற்றும் ஆற்று நீர் சீராக செல்லும் வகையில் பணிகள் மேற்கொண்டால், பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி