காய்கறி விதை பாக்கெட் ரூ.10க்கு விற்பனை
கரூர்:'காய்கறி விதைகள் ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் ஆடிப்பட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், வெண்டை, கொத்தவரை, தக்காளி, கீரை, புடலை, கத்திரி, சுரைக்காய், பீர்க்கன், பாகல், பொரியல் தட்டை, முள்ளங்கி, அவரை ஆகிய விதைகள் முழு விலையில் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.எனவே, விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் ஒரு பாக்கெட்டிற்கு, 10 ரூபாய் செலுத்தி தேவையான விதைகளை பெற்றுக்கொள்ளலாம். காய்கறி விதைகளை வீட்டின் பின்புறம், மாடி தோட்டம் போன்ற இடங்களில் விதைப்பு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.