உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

அரவக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் தாராபுரம் சாலை, பள்ளப்பட்டி சாலை, கரூர் சாலை முக்கியமானவையாக உள்ளது. புறவழிச்சாலையாக கரடிபட்டியிலிருந்து, காவல் நிலையம் வழியாக ஈஸ்வரன் கோவில் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்வதற்கு என்றே புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் கடந்த ஓராண்டாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. பணி முடிந்தும் ஒரு சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, மூடாததால் வாகன ஓட்டிகள் வந்து செல்ல முடியாமல் சாலை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.எனவே கனரக வாகனங்கள் நகர சாலையிலேயே வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலையில் பள்ளி, கல்லூரி அலுவலகங்கள் செல்வோர் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். மாலையிலும் இதே நிலைமை தான். அரவக்குறிச்சியில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததாலும், புறவழிச்சாலையை பயன்படுத்தாத கனரக வாகனங்களாலும் அவசர வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவலரை பணியில் அமர்த்தவும், கனரக வாகனங்களை புறவழிச்சாலையாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !