100 நாள் வேலை திட்டத்தில் பணி கேட்டு கிராம மக்கள் மனு
கரூர்; நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிகளை வழங்க கோரி, ராஜேந்திரம் கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்தில், வி.பி-.ஜி., ராம் ஜி திட்டத்தில் (100 நாள் வேலை உறுதி திட்டம்), 700 பேர் அடையாள அட்டை வைத்துள்ளனர். இங்-குள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தை நம்பி உள்ளனர். தற்போது வேலை வழங்கப்பட-வில்லை என்பதால், மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. உடனடியாக வேலை கிடைக்க நட-வடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில், குடிநீர் வசதியின்றி தவிப்பதால் பல கி.மீ., துாரம் சென்று எடுக்க வேண்டி உள்ளது. காவிரி கூட்டுக்-குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ள நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.