தபால் நிலையம் சார்பில் நடை பயணம்
கரூர்:கரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து, 'ஹர் கர் திரங்கா' தேசியக்கொடி விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தலைமை வகித்தார். மத்திய அரசின் 'ஹர் கர் திரங்கா' (வீடு தோறும் தேசியக்கொடி) இயக்கத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே தேசிய பற்றையும், ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் நடை பயணம் நடந்தது. இங்கிருந்து புறப்பட்டு ஜவஹர் பஜார், மடவளாகம் தெரு, சன்னதி தெரு வழியாக, தலைமை தபால் நிலையத்தை நடை பயணம் வந்தடைந்தது. அஞ்சலக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தேசியக்கொடிகளை ஏந்தியபடி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.