கொத்தப்பாளையம் தடுப்பணையை மூழ்கடித்து செல்லும் நீரால் -கரையோர மக்களுக்கு எச்ச-ரிக்கை
அரவக்குறிச்சி: அமராவதி அணையிலிருந்து வரும், 725 கனஅடி உபரிநீர் கரூர் மாவட்ட எல்லையான அரவக்கு-றிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி செல்வதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை, 90 அடி உயரம், 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம், சின்னதாராபுரம், ராஜபுரம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்-களில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், வாழை, மஞ்சள் பயிர்களை பயிரிட்டுள்ளனர்.இந்நிலையில், அமராவதி அணை நீர்பிடிப்பு பகு-தியில் கனமழை பெய்து வருவதால், பாம்பாறு, சின்னாறு உள்ளிட்ட கிளை நதிகளில் இருந்து அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 90 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம், 83.99 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பாது-காப்பு கருதி அமராவதி அணைக்கு வரும், 725 கனஅடி தண்ணீர் அமராவதி ஆற்றில் வெளி-யேற்றப்படுகிறது.இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான அர-வக்குறிச்சி, கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி செல்கிறது. எனவே, கரை-யோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர். அணை பாதுகாப்புக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட-தாலும், அரவக்குறிச்சி உள்ளிட்ட அமராவதி ஆற்றுப்பகுதியில் இதன் காரணமாக வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.