சுத்தம் செய்யாத கால்வாய் சாலையில் ஓடும் தண்ணீர்
கரூர், கரூர், காந்தி கிராமம் பகுதியில் சுத்தம் செய்யப்படாத சாக்-கடை கால்வாயில், மழை பெய்யும் போது சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது.கரூர், காந்திகிராமம் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தெருக்களில் வடிகால் கால்வாய் செல்கிறது. பல சாக்-கடை கால்வாய்கள், நீண்ட காலமாக துார்வாரப்படாமல் உள்-ளன. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்-கியுள்ளன. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்-லாமல் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, சாலையில் வெள்ளம் போல தண்ணீர் ஓடுகிறது. இதனால், ஏற்படும் சுகாதார சீர்-கேட்டை தடுக்க, கால்வாயை துார்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டியது அவசியம்.