மேலும் செய்திகள்
தண்ணீர் கேட்டு காலிக்குடத்துடன் மனு
24-Jun-2025
கரூர்: கரூர் அருகே, திருச்சி சாலையில் நேற்று குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் சென்றது.கரூர் மாவட்டத்தில் உள்ள, கிராம பஞ்சாயத்துகளுக்கு காவிரி, அமராவதி ஆறுகளில் இருந்து, நீரேற்று நிலையங்கள் மூலம், தண்ணீர் மேல்நிலை குடிநீர் தொட்-டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிறகு, குழாய்கள் மூலம் பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்-கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகி-றது. ஆனால், கடந்த சில நாட்களாக கரூர்-திருச்சி சாலை புலியூர் தனியார் சிமென்ட் ஆலை எதிரே, குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால், குறிப்பிட்ட கிராம பஞ்., பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாட்களில் மட்டும், தண்ணீர் சாலையில் செல்வதால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை கண்டு கொள்-வது இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, புலியூர் தனியார் சிமென்ட் ஆலை எதிரே, உடைந்த குடிநீர் குழாயை, உடனடியாக சரி செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் புலியூர் டவுன் பஞ்., அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
24-Jun-2025