உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,702 கன அடி தண்ணீர் வந்தது.நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 14,631 கன அடியாக அதிகரித்தது. அதில், சம்பா சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 13,711 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 920 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைக.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்-மட்டம், 25.71 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி