மேலும் செய்திகள்
பெ.ஆ.கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து சரிவு
11-Aug-2025
கரூர், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்தது. இதனால், தடுப்பணை நிரம்பி ஆற்றில் தண்ணீர் சென்றது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு, 1,008 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது. இதனால், ஆற்றில் தண்ணீர் சென்றது.நேற்று முன்தினம் தடுப்பணைக்கு வினாடிக்கு, 686 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தடுப்பணைக்கு வினாடிக்கு தண்ணீர் வரத்து, 2,064 கன அடியாக அதிகரித்தது.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 48 ஆயிரத்து, 141 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 46 ஆயிரத்து, 671 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.43 அடி யாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
11-Aug-2025