நீர்வளத்துறை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து சேதம்
கிருஷ்ணராயபுரம்:மாயனுார் நீர்வளத்துறை பழைய கட்டடத்தின் சுற்றுசுவர் முன்பகுதி சேதமடைந்துள்ளது. மாயனுாரில் நீர்வளத்துறை பழைய அலுவலகம் உள்ளது. உள்ளே செல்லும் வழியில், முன் பக்கம் உள்ள கேட் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இந்த கட்டடத்தின் உள் பகுதியில், மழை காலங்களில் பாதுகாப்புக்கு தேவையான மணல் மூட்டைகள் மற்றும் இதர பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மாயனுார் பஸ் ஸ்டாப் பகுதியில் புதிய கட்டடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. பழைய அலுவலக கட்டடத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இடிந்த நிலையில் உள்ள பழைய கட்டட முன் பக்க சுற்றுச்சுவரை புதிதாக கட்ட நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.