உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குகை வழிப்பாதையில் தண்ணீர் தேக்கத்தால் அவதி

குகை வழிப்பாதையில் தண்ணீர் தேக்கத்தால் அவதி

குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் ரயில்வே குகை வழிப்பாதையில் நீர் ஊற்று எடுப்பதால், ஒரு அடிக்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தினந்தோறும் காலை, 8:30 மணிக்கு மேல் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர். தண்ணீர் தேக்கத்தால், காலையில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்கு செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாகனங்களும் தண்ணீர் புகுந்து பழுதாகிறது. குகை வழிப்பாதையில் தண்ணீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை