மேலும் செய்திகள்
புகழிமலை கோவிலில் ஆனி மாத சிறப்பு பூஜை
18-Jun-2025
கரூர், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.பிரசித்தி பெற்ற, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு ஆனி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணை மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களில், ஆனி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.* கரூர் அருகே நன்செய் புகழூர் அக்ரஹாரம் துர்க்கா தேவி கோவிலில், ஆனி திருமஞ்சனத்தையொட்டி, நேற்று மாலை ஸ்ரீ அஷ்ட தசா பூஜை நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
18-Jun-2025