மேலும் செய்திகள்
வாழை சாகுபடி பணியில் விவசாயிகள்
04-Apr-2026
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், குறுவை சாகுபடி நெல் வயல்களில், களை எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், உடையந்தோட்டம், அந்தரப்பட்டி, சிந்தலவாடி பகுதிகளில் இரண்டாம் கட்ட சாகுபடியாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வயல்களில் நெல் பயிர்கள் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பயிர்கள் வளர்ந்து வருகிறது. அதேசமயம் நெல் பயிர்கள் நடுவில் களைகள் அதிகமாக வளர்ந்து வருகிறது.இதனை தடுக்கும் வகையில், விவசாய தொழிலாளர்களை கொண்டு நெல் வயல்களின் நடுவில் வளர்ந்த களைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நெல் வயல்களுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
04-Apr-2026