ரூ.4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர்,:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு காந்திகிராமம், முல்லை நகர் விளையாட்டு மைதானத்தில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.வருவாய்த் துறை சார்பில், ஐந்து பேருக்கு வகுப்பு சான்று, வருமான சான்று, பிறப்பிட சான்று உள்ளிட்டவைகளையும், கூட்டுறவு துறை சார்பில், ஐந்து பேருக்கு, 4.88 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, மாநகராட்சி சார்பில், ஐந்து பேருக்கு சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணை, எரிசக்தித் துறை சார்பாக ஒருவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணை என மொத்தம், 16 பேருக்கு, 4.88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார். முகாமில் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மண்டலக்குழு தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.