உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூர், தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு, 30 முதல், 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இதில், பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:00 மணி வரை மாவட்டத்தில் மழை பதிவாகி உள்ள இடங்கள்: கரூர் 17.80 மி.மீ., அரவக்குறிச்சி, 6.40, அணைபாளையம், 19.40, க.பரமத்தி, 43.60, தோகைமலை, 6.80, கிருஷ்ணராயபுரம், 25.50, பஞ்சப்பட்டி, 12, கடவூர், 17, பாலவிடுதி, 20, மைலம்பட்டியில், 10 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ