உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா

அரவக்குறிச்சி, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூரிலிருந்து, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. இதுதவிர சில நேரங்களில் தீ விபத்துகளும் ஏற்படுகின்றன. அப்போது கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படுகிறது.எனவே க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி