உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுமா?

மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுமா?

கரூர்: கரூரில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைத்துள்ள, நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்ட, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான புங்கன், புளியமரம், அரச மரம், வேப்ப மரங்கள் உள்ளன. பல மரங்கள், 50 ஆண்டுகளை கடந்தவையாக உள்ளன. மரங்களில், பள்ளி, கல்லுாரி, ரியல் எஸ்டேட், கோச்சிங் சென்டர் விளம்பர பலகைகள் அதிக அளவில் ஆணி அடித்து வைக்கப்பட்-டுள்ளன. ஆணி அடிப்பதால் நாளடை வில் மரங்கள் காய்ந்து பட்டுப்போக அதிகவாய்ப்பு உள்ளது. சிறிய மரங்கள் முதல் பல ஆண்டு கடந்த பழமையான மரங்களில், ஆணி அடித்து விளம்பர பலகை வைப்-பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கரூர் மாவட்-டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும், 4 சதவீதம் தான் மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. அதிலும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில், 2 சதவீத அளவில் மரங்கள் இருக்கின்றன. மீத-முள்ள, 2 சதவீத மரங்கள் தான் கரூர் மாவட்டம் முழுவதும் உள்-ளன. வனப்பரப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நட-வடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இருக்கும் மரங்களில், விளம்பர பதாகைகளை, ஆணி அடித்து வைக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.கடந்த சில ஆண்டுக்கு முன், கரூர் கலெக்டர் உத்தரவை அடுத்து இது போன்று விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பின், மரங்களில் ஆணி அடித்து விளம்-பரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் மரங்களில் ஆணி அடிப்பது அதிகரித்துள்ளது. மரங்-களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ