தான்தோன்றிமலையில் வடிகால் துார்வாரப்படுமா?
கரூர், டிச. 29-கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை வடக்குத்தெரு, வெங்கடேஷ்வரா நகர் பகுதி, இலங்கை தமிழர் முகாம், சவுரிமுடித்தெரு, வ.உ.சி., வடக்குத்தெரு உள்ளிட பல தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை வடிகால் பெரும்பாலும் தரையோடு தரையாக தாழ்வாக உள்ளது.இதனால், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, சாக்கடை நீர் சாலையில் ஓடுகிறது. பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. கழிவு நீர் தேக்கத்தால், துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடை வடிகால்களை தரம் உயர்த்தி கட்ட வேண்டும். அதை துார்வார தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.