உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாடியில் இருந்து கால் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு

மாடியில் இருந்து கால் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு

குளித்தலை, குளித்தலை அடுத்த, ஆர்.டி. மலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேலு, 63, விவசாய கூலி தொழிலாளி. திருச்சி மாவட்டம், திருவளர்ச்சிபள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இவரது தங்கை ராஜலட்சுமி, 50, தனது தாயை பார்க்க கடந்த, 18ம் தேதி வந்தார். கடந்த 19 காலை 7:00 மணியளவில் மாடிக்கு சென்று, தொட்டியில் தண்ணீர் நிரம்பி விட்டதா என்று பார்ப்பதற்காக, மாடி படிக்கட்டில் ஏறி பார்க்க சென்றபோது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் ராஜலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து ராஜலட்சுமி அண்ணன் தங்கவேலு கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ