உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரத்தின சாய்பாபா கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை

ரத்தின சாய்பாபா கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை

குளித்தலை, குளித்தலை அடுத்த, சத்தியமங்கலத்தில் ரத்தின சாய்பாபா கோவிலில் சக்தி நாராயண திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையானது உலக அமைதிக்காகவும், மழை பெய்ய வேண்டியும், திருமணமான பெண்களின் கணவர் மற்றும் குடும்பத்தினர் நலமுடன் வாழ வேண்டியும், குடும்பத்தில் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், தேங்காய், பூ, விளக்கு ஆகியவற்றை வைத்து பெண்கள் பூஜையில் ஈடுபட்டனர்.சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள திருமணமான, திருமணமாகாத பெண்கள் குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை