மேலும் செய்திகள்
அனைத்து தொழிற்சங்கங்கள்சார்பில் பிரசார இயக்கம்
15-Feb-2025
கரூர்: கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கரூரில் உலக பெண்கள் தின விழா, துணைத்தலைவர் மீனாட்சி தலைமையில் நேற்று நடந்தது. அதில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், பாலியல் துன்புறுத்தலை தடுக்க, நடைமுறையில் உள்ள சட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில், அடையாள அட்டை வழங்க வேண்டும், உழைக்கும் மக்கள் அனைவருக்கும், இ.எஸ்.ஐ., வசதி வழங்க வேண்டும், ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராதிகா, துணை செயலாளர் சிவசங்கரி, வழக்கறிஞர் ஹசீன் ஷர்மிளா உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Feb-2025