கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாபந்தல் அமைக்கும் பணி துவக்கம்
கரூர், கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும், 11ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து வரும், 16ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல், 26ல் தேரோட்டம், 27ல் மா விளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.மேலும் வரும் ஜூன், 5ல், பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதனால், கோவில் வளாகத்தில் வைகாசி திருவிழாவுக்காக, பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.