உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் அடிக்கும் பணி தீவிரம்

வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் அடிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து மேட்டுத்திருக்காம்புலியூர் வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் இரண்டு செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவில், புதிய பாலம் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட பாலங்கள் வழியாக வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் அணுகு சாலை அமைக்கப்பட்டது. மேலும் பாலம் வழியாக மக்கள் வாகனங்களில் செல்லும் வகையில், பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சாலை நடுவில், வாகனங்கள் வேகமாக செல்லாமல் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் புதிதாக வேகத்தடை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசும் பணி துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை