கட்டளை மேட்டு வாய்க்கால் துார் வாரும் பணிகள் துரிதம்
கிருஷ்ணராயபுரம் :பிச்சம்பட்டி பகுதி வழியாக செல்லும், கட்டளை மேட்டு வாய்க்காலை துார் வாரும் பணிகள் துரிதமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி கதவணை வழியாக பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது.வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. அந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலில் பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் கொண்டு துார்வாரும் பணி நடந்து வருகிறது.அப்போது வாய்க்காலில் தேங்கிய கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை போன்றவை அகற்றப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் தடை இன்றி செல்லும் வகையில் பணி நடந்தது.