மதுவில் விஷம் கலந்து தொழிலாளி விபரீத முடிவு
குளித்தலை:குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்-குமார் மனைவி மாலதி, 21. இவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. தினேஷ்குமார் விவசாய கூலி வேலை செய்து வந்தார். மேலும் குடி பழக்கம் இருந்து வந்தது. சாப்பிடாமல் இருந்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட்டு வந்ததாகவும், கடந்த, 27 மதியம் மதுவுடன் பூச்சி கொல்லி மருந்தையும் கலந்து குடித்-துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு, கரூர் தனியார் மருத்துவம-னையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார்.இது குறித்து அவரது மனைவி மாலதி கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.