மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம், கொம்பாடிப்பட்டி சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, நீர் ஊற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்து கொம்பாடிப்பட்டி, வல்லம் ஆகிய சாலையோர இடங்களில் பஞ்சாயத்து சார்பில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் வேம்பு, புங்கன், ஈட்டி, புளியமரம், பூவரசு உள்பட பல வகையான மரக்கன்றுகள் சாலையின் இருபுறமும் நடப்பட்டுள்ளது. தற்போது கடுமையான வெயில் அடிப்பதால், நடப்பட்ட மரக்கன்றுகள் கருகி விடாமல் இருக்கும் வகையில், பஞ்சாயத்து சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.